குறள் 1061:
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்கலைஞர் உரை:
இரவாமை கோடி உறும்.
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகலைஞர் உரை:
கெடுக உலகியற்றி யான்.
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.குறள் 1063:
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்கலைஞர் உரை:
வன்மையின் வன்பாட்ட தில்.
வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்கலைஞர் உரை:
காலும் இரவொல்லாச் சால்பு.
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.குறள் 1065:
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுகலைஞர் உரை:
உண்ணலின் ஊங்கினிய தில்.
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.குறள் 1066:
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குகலைஞர் உரை:
இரவின் இளிவந்த தில்.
தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.குறள் 1067:
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கலைஞர் உரை:
கரப்பார் இரவன்மின் என்று.
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.குறள் 1068:
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்கலைஞர் உரை:
பார்தாக்கப் பக்கு விடும்.
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.குறள் 1069:
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளகலைஞர் உரை:
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.குறள் 1070:
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்கலைஞர் உரை:
சொல்லாடப் போஒம் உயிர்.
இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?.
No comments:
Post a Comment