குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைகலைஞர் உரை:
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.குறள் 1082:
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குகலைஞர் உரை:
தானைக்கொண் டன்ன துடைத்து.
அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.குறள் 1083:
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்கலைஞர் உரை:
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.குறள் 1084:
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்கலைஞர் உரை:
பேதைக்கு அமர்த்தன கண்.
பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?.குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்கலைஞர் உரை:
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.குறள் 1086:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்கலைஞர் உரை:
செய்யல மன்இவள் கண்.
புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.குறள் 1087:
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்கலைஞர் உரை:
படாஅ முலைமேல் துகில்.
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.குறள் 1088:
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்கலைஞர் உரை:
நண்ணாரும் உட்குமென் பீடு.
களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!.குறள் 1089:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குகலைஞர் உரை:
அணியெவனோ ஏதில தந்து.
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.குறள் 1090:
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கலைஞர் உரை:
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.
No comments:
Post a Comment