குறள் 951:
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்கலைஞர் உரை:
செப்பமும் நாணும் ஒருங்கு.
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்கலைஞர் உரை:
இழுக்கார் குடிப்பிறந் தார்.
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.குறள் 953:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்கலைஞர் உரை:
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.குறள் 954:
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்கலைஞர் உரை:
குன்றுவ செய்தல் இலர்.
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.குறள் 955:
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிகலைஞர் உரை:
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.குறள் 956:
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகலைஞர் உரை:
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.குறள் 957:
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்கலைஞர் உரை:
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.குறள் 958:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்கலைஞர் உரை:
குலத்தின்கண் ஐயப் படும்.
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.குறள் 959:
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்கலைஞர் உரை:
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.குறள் 960:
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்கலைஞர் உரை:
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.
No comments:
Post a Comment