குறள் 1041:
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்கலைஞர் உரை:
இன்மையே இன்னா தது.
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.குறள் 1042:
இன்மை எனவொரு பாவி மறுமையும்கலைஞர் உரை:
இம்மையும் இன்றி வரும்.
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.குறள் 1043:
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாககலைஞர் உரை:
நல்குரவு என்னும் நசை.
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தகலைஞர் உரை:
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.குறள் 1045:
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்கலைஞர் உரை:
துன்பங்கள் சென்று படும்.
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்கலைஞர் உரை:
சொற்பொருள் சோர்வு படும்.
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.குறள் 1047:
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்கலைஞர் உரை:
பிறன்போல நோக்கப் படும்.
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.குறள் 1048:
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கலைஞர் உரை:
கொன்றது போலும் நிரப்பு.
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்கலைஞர் உரை:
யாதொன்றும் கண்பாடு அரிது.
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.குறள் 1050:
துப்புர வில்லார் துவரத் துறவாமைகலைஞர் உரை:
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.
No comments:
Post a Comment