குறள் 1021:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்கலைஞர் உரை:
பெருமையின் பீடுடையது இல்.
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்கலைஞர் உரை:
நீள்வினையால் நீளும் குடி.
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்கலைஞர் உரை:
மடிதற்றுத் தான்முந் துறும்.
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்கலைஞர் உரை:
தாழாது உஞற்று பவர்க்கு.
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்கலைஞர் உரை:
சுற்றமாச் சுற்றும் உலகு.
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.குறள் 1026:
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தகலைஞர் உரை:
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்கலைஞர் உரை:
ஆற்றுவார் மேற்றே பொறை.
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துகலைஞர் உரை:
மானங் கருதக் கெடும்.
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்கலைஞர் உரை:
குற்ற மறைப்பான் உடம்பு.
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்கலைஞர் உரை:
நல்லாள் இலாத குடி.
வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.
No comments:
Post a Comment