மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்கலைஞர் உரை:
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.குறள் 52:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைகலைஞர் உரை:
எனைமாட்சித் தாயினும் இல்.
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.குறள் 53:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்கலைஞர் உரை:
இல்லவள் மாணாக் கடை?.
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்கலைஞர் உரை:
திண்மைஉண் டாகப் பெறின்.
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்கலைஞர் உரை:
பெய்யெனப் பெய்யும் மழை.
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றகலைஞர் உரை:
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்கலைஞர் உரை:
நிறைகாக்கும் காப்பே தலை.
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்கலைஞர் உரை:
புத்தேளிர் வாழும் உலகு.
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.குறள் 59:
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்கலைஞர் உரை:
ஏறுபோல் பீடு நடை.
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்கலைஞர் உரை:
நன்கலம் நன்மக்கட் பேறு.
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
No comments:
Post a Comment