குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுகலைஞர் உரை:
அல்லவை செய்தொழுகும் வேந்து.
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.குறள் 552:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கலைஞர் உரை:
கோலொடு நின்றான் இரவு.
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.குறள் 553:
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்கலைஞர் உரை:
நாடொறும் நாடு கெடும்.
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
குறள் 554:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்கலைஞர் உரை:
சூழாது செய்யும் அரசு.
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.குறள் 555:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேகலைஞர் உரை:
செல்வத்தைத் தேய்க்கும் படை.
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.குறள் 556:
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்கலைஞர் உரை:
மன்னாவாம் மன்னர்க் கொளி.
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.குறள் 557:
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்கலைஞர் உரை:
அளியின்மை வாழும் உயிர்க்கு.
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.குறள் 558:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாகலைஞர் உரை:
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.குறள் 559:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிகலைஞர் உரை:
ஒல்லாது வானம் பெயல்.
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்கலைஞர் உரை:
காவலன் காவான் எனின்.
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.
No comments:
Post a Comment